முடக்கப்பட்ட தமிழக அரசு இணையதளம் - பாகிஸ்தான் சதியா???

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 12:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
முடக்கப்பட்ட தமிழக அரசு இணையதளம் - பாகிஸ்தான் சதியா???

சுருக்கம்

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை  ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அரசின் பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதையடுத்து தேசியதகவல் மையம் இணையதளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்களை மீறி அரசின் இணையதளத்தை முடக்கியுள்ள ஹேக்கர்கள் பல்வேறு தகவல்களையும் திருடியுள்ளனர். தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in முடக்கப்பட்டதை தேசிய தகவல் மையமும் 

உறுதி செய்துள்ளது. அது மட்டுமல்லாது பேக் அப் (Back Up) சர்வரில் இருந்த தகவல்களும் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இணையதளம் முடக்கம் காரணமாக ஆவணங்கள் எதுவும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்றும், புகைப்படங்கள், தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. தற்போது இணையதளத்தை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள அரசு இணையதளங்களை முடக்கி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் இணையதளமும் முடக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!