மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு !!

Published : Feb 28, 2019, 09:16 PM ISTUpdated : Feb 28, 2019, 09:18 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு !!

சுருக்கம்

நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. .கடந்த 2011 - 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுகள், சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

நடிகர்கள்

விஜய் சேதுபதி
கார்த்தி
பிரசன்னா
ஆர்.பாண்டியராஜன்
சசிகுமார்
ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
தம்பி ராமையா
சூரி
பொன்வண்ணன்
பிரபுதேவா
சரவணன்
பாண்டு
சந்தானம்
டி.பி.கஜேந்திரன்
பி.ராஜீவ் (எ) ராஜசேகர்
ஆர்.ராஜசேகர்
சிங்கமுத்து

நடிகைகள்

குட்டி பத்மினி
நளினி
சாரதா
காஞ்சனா தேவி
டி.ராஜஸ்ரீ
பி.ஆர்.வரலட்சுமி
பிரியாமணி

நடன இயக்குநர்கள்

புலியூர் சரோஜா
தாரா

பின்னணிப் பாடகர்கள்

சசிரேகா
கானா உலகநாதன்
கிருஷ்ணராஜ்
மாலதி
கானா பாலா
உன்னி மேனன்

காஸ்ட்யூம் டிசைனர்

காசி

ஒளிப்பதிவாளர்கள்

பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்
ரத்தினவேலு
ரவிவர்மன்

இயக்குநர்கள்

சித்ரா லட்சுமணன்
சுரேஷ் கிருஷ்ணா
பவித்ரன்
ஹரி

சண்டைப்பயிற்சி இயக்குநர்

ஜூடோ ரத்னம்

 

இசையமைப்பாளர்கள்

யுவன் ஷங்கர் ராஜா
விஜய் ஆண்டனி

பாடலாசிரியர்
யுகபாரதி

தயாரிப்பாளர்கள்

ஏ.எம்.ரத்னம்
கலைஞானம்


புகைப்படக் கலைஞர்கள்

ஸ்டில்ஸ் ரவி
சேஷாத்ரி நாதன் சுகுமாரன்

இவை தவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு ‘பாரதி விருது’ம், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?