அதிமுக தேர்தல் அறிக்கையில் ரஜினி வாய்ஸ்... எடப்பாடி அதிரடி ப்ளான்..!

Published : Feb 28, 2019, 06:33 PM IST
அதிமுக தேர்தல் அறிக்கையில் ரஜினி வாய்ஸ்... எடப்பாடி அதிரடி ப்ளான்..!

சுருக்கம்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களை வென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிற அதிமுக அதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களை வென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிற அதிமுக அதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. போட்டியிடவும் இல்லை எனக் கூறி நழுவிக் கொண்ட ரஜினி, “தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என நம்பிக்கை தருபவர்களுக்கு மட்டுமே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் மறைமுக ஆதரவு தங்களுக்குத்தான் என பல கட்சிகளும் கூறிவந்தன. ஆனால், அதிமுக அமைச்சர்கள் பலரும் ரஜினியின் ஆதரவு தங்களுக்கே என மேடைகள் தோறும் முழங்க ஆரம்பித்து விட்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தித் தாளில் காலா வாக்கு அதிமுகவுக்கே என கவிதை எழுதி ரஜினி ரசிகர்களை கவர ஆரம்பித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த வாய்ஸை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான முக்கியமான வாக்குறுதி ஒன்றைத் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவெடுத்து இருக்கிறது அதிமுக - பாஜக கூட்டணி என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி