உதகையில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் மாநாடு.. அடுத்த பஞ்சாயத்துக்கு அச்சாரம் போடுமா.?

By Asianet TamilFirst Published Apr 25, 2022, 8:08 AM IST
Highlights

கடந்த  டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கபப்ட்டதாக தகவல்கள் வெளியானது. 

உதகையில் இன்று துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாடு ஆளுநர் மாளிகை சார்பில் நடைபெற உள்ள நிலையில், அது அடுத்த அதிர்வலையை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துகிறது. 

துணைவேந்தர்கள் மாநாடு

உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாட்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைக்கிறார். ஆளுநர் மாளிகை சார்பில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த  மாநாட்டில், புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி வேம்பு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

துணைவேந்தர்களுடன் ஆலோசனை

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதம் முற்றியுள்ள நிலையில் இந்த மாநாட்டு நடைபெறுகிறது. கடந்த  டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கபப்ட்டதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த விவகாரங்கள் பேசு பொருளாயின.

அடுத்த மோதலுக்கு வழிவகுக்குமா?

மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரவாகப் பேசுவதையும், அதை செயல்படுத்துவதன் அவசியத்தையும் ஆளுநர் ரவி அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, மாநிலத்தில் கல்வி கொள்கையை வகுப்பதற்காக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலையில் குழு ஒன்றை அமைத்து அண்மையில்தான் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப்பட்டால், அது மீண்டும் அடுத்த விவாதத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆளுநர் - திமுக அரசுக்கு இடையேயான மோதல் முற்றவும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
 

click me!