தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு.. குடியரசு தலைவர் அறிவிப்பு.. !

By vinoth kumarFirst Published Aug 27, 2021, 6:42 PM IST
Highlights

கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் (81) பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தமிழகத்திற்கு முன்னதாக அசாம் மாநில ஆளுநராக இருந்து வந்தார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் (81) பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தமிழகத்திற்கு முன்னதாக அசாம் மாநில ஆளுநராக இருந்து வந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில ஆளுநருக்கான பதவி இடம் காலியாக உள்ள நிலையில் தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை பன்வாரிலால் புரோகித்தை வகிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். 

click me!