குட்நியூஸ்.. சென்னையைச் சுற்றியுள்ள 5 சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்.. அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Aug 27, 2021, 6:25 PM IST

மகளிருக்கான இலவச பயணம் சலுகையை போல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி விலையில்லாமல் பயணிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  


சென்னை சுற்றியுள்ள  5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசுகையில்;- மகளிருக்கான இலவச பயணம் சலுகையை போல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி விலையில்லாமல் பயணிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

Tap to resize

Latest Videos

இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு;-  சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு அமைச்சரான எனக்கே பல நிமிடங்கள் ஆவதாக கூறினார். தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் உள்ளது. இவை பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடிகளும் உள்ளது. சென்னை நகர்புற பகுதிக்குள் உள்ள சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5  சுங்கச்சாவடிகளை அகற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏத்கனவே கடிதம் எழுதியுள்ளார். கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

click me!