மார்ச் 31 வரை பள்ளிகூடங்களுக்கு லீவு விடுங்க...!! கொரோனா அச்சத்தில் பதறும் ஆசிரியர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2020, 6:29 PM IST
Highlights

வருமுன் காத்திடும் நோக்கில்  எல்.கே.ஜி  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது

கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு கருதி  மார்ச் - 31 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது, இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-  சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில்  பாதிப்பு பரவலாகி வருகிறது. 

எனவே  தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்  மாணவர்கள் நலன்கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பினைத் தவிர்த்து மற்றவகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்துசெய்து விடுமுறை அளித்து ஆவனச்செய்ய வேண்டுகிறோம்.  மேலும் கர்நாடகாவில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. அதேவேளையில் அவற்றை குழந்தைகள் கடைபிடிப்பதில் பல சிரமங்கள் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. கேரளா புதுச்சேரி மாநிலங்களுக்கு தொடக்க நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


  

ஆகவே குழந்தைகளின் நலன்கருதியும் தற்போது சளி இருமல் தும்மல் போன்றவை அதிகரித்துவருவதால்  வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தோடு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமுன் காத்திடும் நோக்கில் 
எல்.கே.ஜி  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

click me!