குழந்தைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் எடப்பாடி அரசு...!! கல்வித்துறையை தாறுமாறாக கிழிக்கும் ஆசிரியர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2020, 3:30 PM IST
Highlights

இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும்.  இது பிஞ்சுகளின் நெஞ்சில்  ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும்.  

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை படிக்கும் பள்ளியிலேயே நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்  கோரிக்கை வைத்துள்ளது.  குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டத்  திருத்தம் 2019 ன்படி தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுக்கல்வி வாரியத்தலைவருமான பள்ளிக்கல்வி  இயக்குநரின் கடித அடிப்படையில் இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்படுகிறது.  ஆடல் பாடல் முறை
விளையாட்டுமுறை கல்வி,  கதைவழி  முறை கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும். 

பள்ளிக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள். வீட்டுச்சூழல் போன்று பள்ளிச்சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள். கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் இஷ்டம் வரும் என்றால் கல்வியினை கல்வியாக பார்க்காமல் கல்விச்சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசு பள்ளிகள் , மாநகராட்சிப்பள்ளிகள் அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள்.  குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டமாக உள்ள நிலையில், இது ஒரேயடியாக பிள்ளைகளை பள்ளிக்கு வரவிடாமல் செய்துவிடும்.

  

இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும்.  இது பிஞ்சுகளின் நெஞ்சில்  ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும்.  பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுத்திடவேண்டாம். ஆகையால், குழந்தைகளின் நலன்கருதி மாண்புமிகு.கல்வி அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை படிக்கும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன்.

click me!