கூட்டணி பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது... மு.க.ஸ்டாலின் கடுங்கோபம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 18, 2020, 2:02 PM IST
Highlights

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார். இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இதனால்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.இதன் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டணி குறித்த கருத்துகளை இருகட்சியினரும் பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’சுமூகமாக பேசி தீர்க்க வேண்டிய இடப்பங்கீடு விவகாரம் அறிக்கை வெளியிட்டதால் பொதுவெளிக்கு வந்து விட்டது. காங்கிரஸ்- திமுக கூட்டணிக்குள் சிறு ஓட்டையாவது விழுந்து விடாதா என குள்ள நரிகள் ஏங்கித் தவிக்கின்றனர்.  கூட்டணி தொடர்பாக பொது விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை.  திமுகவின் மனப்பாங்கினை உணர்ந்த கே.எஸ்.அழகிரி இருகட்சிகளிடையே கருத்து வேறுபாடு இல்லை எனக் கூறியுள்ளார். வெளிப்படையான விவாதத்தினால் விரும்பத்தகாத கருத்துகள் எழும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.  

click me!