சமரசத்தின் போதும் ரஜினியை பற்றி கே.எஸ்.அழகிரியிடம் பேசிய மு.க.ஸ்டாலின்... அக்கறையா..? அச்சமா..?

By Thiraviaraj RMFirst Published Jan 18, 2020, 1:47 PM IST
Highlights

ரஜினி ரொம்ப நல்லவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி ரொம்ப நல்லவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ’’ரஜினி நல்லவர். அதை நான் ஒன்றும் கூறவில்லை. சினிமா என்றால் வசனம் எழுதி கொடுப்பார்கள். ஆனால் துக்ளக் விழாவில் சொந்தமாக பேசியதால் ரஜினி குழம்பி விட்டார். ஒன்று அவர் துக்ளக்கை பற்றி பேசியிருக்க வேண்டும். அல்லது முரசொலியை பற்றி பேசியிருக்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு பேசியது தவறு.

 

அவரவர் கருத்தை அவரவர் கூறினார்கள், பின்னர் அமைதி ஆகி விட்டார்கள்.  எதிர் கட்சி அப்படித்தான் சொல்லுவார்கள். கமல் தன்னை மதவாத கட்சியின் ஆதரவாளர் என்று கூறுகிறார். பின்னர் ரஜினியின் ஆதரவையும் கேட்கிறார். அப்படி என்றால் பாஜகவின் ஆதரவை கமல் நாடுகிறாரா? திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த  போது தர்பார் படம் குறித்து பேசினோம், படம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் சொன்னார். என்னை தர்பார் படம் பார்த்தீர்களா? என்று ஸ்டாலின் கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன்.  

காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. துக்ளக் -உடன் முரசொலியை ரஜினி ஒப்பிட்டு பேசியது தவறு’’என அவர் தெரிவித்துள்ளார்.  கூட்டணிக்குள் ஏற்பட்ட மனத்தாங்கலை பற்றி பேசப்போன இடத்தில் இரு கட்சித் தலைவர்களும் தங்கள் தரப்பு சமரசங்களை பற்றி பேசும்போது ரஜினியை பற்றி ஸ்டாலின் பேசியதாக கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது ரஜினி இந்தக் கூட்டாணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர வைப்பதாக அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர். 
 

click me!