நான் ரஜினி ரசிகன்தான் அதிரடியாக அறிவித்த ராஜபக்ஷே...!! இலங்கைக்கு வர சிவப்பு கம்பளம் விரிப்பு...!!

Published : Jan 18, 2020, 01:17 PM IST
நான் ரஜினி ரசிகன்தான் அதிரடியாக அறிவித்த ராஜபக்ஷே...!! இலங்கைக்கு வர சிவப்பு கம்பளம் விரிப்பு...!!

சுருக்கம்

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின்  ரசிகர்கள் .  அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் , அவருக்கு ஒரு தடையும் இல்லை என கூறியுள்ளனர்  

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை எனவும் அவர் வரக்கூடாது என வெளியான வதந்திகளில் உண்மை இல்லை எனவும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார் .  இது குறித்து ட்விட்டரில்  பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வடக்கு  மாகாண சபையின்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் அவரது  இல்லத்தில் சந்தித்துப் பேசினார் .  அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு என பரபரப்பாக பேசப்பட்டது .

அப்போது  பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் ரஜினியுடன் பகிர்ந்துகொண்ட விக்னேஸ்வரன் ,  கட்டாயம் ஒருமுறை இலங்கைக்கு வர வேண்டும் என ரஜினிக்கு அழைப்பு  விடுத்தார் ,  ரஜினியும் அதை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் ரஜினி இலங்கைக்கு வர கூடாது எனவும், அரசியல் நோக்கத்தோடு அவர் இலங்கைக்கு வருவதை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை தடை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின .  இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது .  இந்நிலையில்  இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் இலங்கை அரசு . 

ரஜினி இலங்கை வர தடை என்ற செய்தி முற்றிலும் தவறானது என விளக்கம் அளித்துள்ளது,  இந்நிலையில்   இதே கருத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ,  ரஜினி இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை , அதுகுறித்து  வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை ,  நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின்  ரசிகர்கள் .  அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் ,  அவருக்கு ஒரு தடையும் இல்லை என கூறியுள்ளனர்
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!