திமுக- காங் கூட்டணி உடையாது இன்னும் வலிமை பெறும்...!! கதர்களுக்கு முட்டுகொடுக்கும் கம்யூனிஸ்டுகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2020, 3:12 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது.   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை ஏன் 

திமுக-காங்கிரஸ்  இடையே எத்தனை பிரச்சினைகள்  வந்தாலும் கூட்டணி உடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார் .  உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் அறிக்கை விட்டதைத் தொடர்ந்து  திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை அடுத்து இரு கட்சி தலைவர்களும் ஒருவரை மாறி ஒருவர் விமர்சித்து வந்தனர் . ஆகவே  திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என ஆளும் கட்சிநினர்  விமர்சித்து வந்தனர் .

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள்  திமுக தலைவரை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது  அந்த பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது,   பாரதிய ஜனதா கட்சியை இரண்டாவது  முறையாக ஆட்சிக்கு வந்த பின்பும் ,  அதன் கொள்கை மாறவில்லை , அதன் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது .  ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று கூறினார்கள் இப்போது லட்சக்கணக்கானோர் வேலை இன்றி தவிக்கின்றனர் . 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது.   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை ஏன் நடந்தது என்பதை அரசுகள்தான்  விளக்க வேண்டும் என்றார் .  தற்போது திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை சுமுகமாக முடிந்துவிடும் என்று தெரிவித்த அவர் .  திமுக காங்கிரஸ் கட்சிகள் இடையே எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் கூட்டணி உடையாது அதற்கு மாறாக கூட்டணி வலிமை பெறும் என்றார் .  ஒரு பெரிய குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவது சகஜம் அதேபோன்றுதான் இப்போதும் ஏற்பட்டுள்ளது என்றார் அவர் .

click me!