நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை.. ஆளுங்கட்சிக்கு கூட்டணி கட்சி கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 19, 2022, 10:19 AM IST
Highlights

சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.

தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது. நாடறிந்த பேச்சாளராகவும் தமிழறிஞராகவும் விளங்கிய 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள், அரசியல் தலைவர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர்.

இதையும் படிங்க;- திடீரென முதல்வர் வீட்டுக்கு சென்ற ஆளுநர் தமிழிசை.. என்ன காரணம் தெரியுமா?

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மீது கருத்தியல் உடன்பாடு கொண்ட ஐயா அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார். மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் – கருத்துப் பங்களிப்பாளரான அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.

இதையும் படிங்க;-  நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை..

அய்யா நெல்லை கண்ணன் அவர்களுடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள அய்யா நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில், அவரின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்  உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார். 

click me!