அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. உடனே டிடிவி. தினகரன் கொடுத்த பரபரப்பு பதில் என்ன தெரியுமா?

By vinoth kumarFirst Published Aug 19, 2022, 9:27 AM IST
Highlights

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த  வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

இதையும் படிங்க;- தொண்டர் பலம் இருக்கிறது என்றால் பொதுக்குழுலில் நிரூபிக்கட்டும்! OPS கோரிக்கையை நிராகரித்து சவால் விடும் EPS.!

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-தற்போது சிறிய சிறிய பிரச்சனைகளாலும், எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து துரோகம் செய்த ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், ஓபிஎஸ் கருத்தை டிடிவி.தினகரன் வரவேற்றுள்ளார். 

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிச்சாமி தற்குறி, தவக்களை; விரைவில் அரசியல் அனாதை ஆவார் இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்..!

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.

தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

 

அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!