மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்.. தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..!

By vinoth kumar  |  First Published Feb 24, 2023, 9:25 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இன்று காலை 9:30  மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

Tap to resize

Latest Videos

கட்சி தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா எதிரில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு காலை 10 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி. தினகரன் தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். சசிகலா, சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மாலை 4 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். 

click me!