அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
undefined
இதையும் படிங்க;- அதிமுக வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்..!
இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயசந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தங்கம் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பொதுச்செயலாளர்கள் தான் கூறினார்.
இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு இது தற்காலிக வெற்றி தான்.. என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் என்ன பண்றார்னு பார்ப்போம்.. டிடிவி..!
இந்நிலையில், ஓபிஎஸ் தேனியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியே புறப்பட்ட போது செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பர். என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.