கொஞ்சம் நேரம் கூட நிலைக்காத எடப்பாடி பழனிசாமியின் சந்தோஷம்.. உயர்நீதிமன்றத்தில் வந்த நோட்டீசால் அதிர்ச்சி.!

By vinoth kumar  |  First Published Feb 24, 2023, 6:51 AM IST

அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. 


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு நடத்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதில் முதல் முன்னாள் முதலமைச்சரும், அந்த துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை.. எப்படி இருக்குமோ என பயந்தேன்.. எடப்பாடி பழனிசாமி..!

இந்நிலையில், அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இபிஎஸ் குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்படதாகவும், தனி நபர் விமர்சனம் வைக்கவில்லை என்று தெரிவித்திருந்தது. 

மேலும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இபிஎஸ் குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆகையால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையும் படிங்க;-  அதிமுக வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்..!

மேலும், அறப்போர் இயக்கத்தின் மனு குறித்து  இபிஎஸ் தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இபிஎஸ்ஐ அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!