தமிழக அரசு போட்ட சூப்பர் பிளான்.!! 24 ,25 ஆம் தேதிகளில் வீட்டுக்கே வந்து தருவாங்க எல்லாம், ரெடியா இருங்க.!!

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2020, 12:58 PM IST
Highlights

அந்தக் டோக்கன்கள்  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதன்படி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள  நாள் மற்றும் நேரத்தில்   உரிய நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் .

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என்றும் ,  அந்த டோக்கன்களின் அடிப்படையில் மக்கள் நியாயவிலை கடைகளில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முழு விவரம் :- கொரோனா நோய் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக தமிழக அரசு மாநிலம்  முழுவதுமான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது

.  

ஏழை மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது இன்றுவரை  1,89 ,01,068 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது ,  அதேபோல 15- 4-2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் படுவதற்கு முன்பே ,  ஏப்ரல் 13 அன்று நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ,  ஒரு கிலோ துவரம் பருப்பு , ஒரு கிலோ சமையல் எண்ணெய் , அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் விலை இன்றி வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்தக் டோக்கன்கள்  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதன்படி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள  நாள் மற்றும் நேரத்தில்   உரிய நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் .  இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது .  மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது அந்த அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

 

click me!