நேற்று பாசம்... இன்று பகை... ஸ்டாலின் கொதிப்பு! அழகிரி தவிப்பு

Published : Feb 10, 2019, 03:54 PM IST
நேற்று பாசம்... இன்று பகை... ஸ்டாலின் கொதிப்பு! அழகிரி தவிப்பு

சுருக்கம்

திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது தன் கவனத்துக்கு வரவில்லை என்றும், இதனால் தான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமளித்துள்ளார். மேலும் திமுகவை குறித்து விமர்சித்த கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். எனவே தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற வாக்குகள் தான் சிதறும் என்று கூறியிருந்தார். 

இவரது கருத்தை கண்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் கே.எஸ். அழகிரி கூறுகையில், திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு உதவுமே தவிர, அவரின் கொள்கைக்கு உதவாது. 

கமலின் விமர்சனம் எனது கவனத்திற்கு முன்னரே வரவில்லை. அவசியம் இல்லாமல் கமல் விமர்சனம் செய்துள்ளார். வாக்குகள் சிதறக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கமலை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!