கொரோனாவின் ஆட்டத்தை அடக்க அதிரடி நடவடிக்கை.. முதலமைச்சர் போட்ட உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published May 28, 2021, 9:54 AM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு ஐ.ஏ எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமான பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு ஐ.ஏ எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமான பரவி வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.  நாளொன்றுக்கு சராசரியாக 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.  

இதனால் எந்த பக்கம் திரும்பினாலும் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் நேற்று மட்டும் பாதிப்பு  2779 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஏற்ற அளவில் குணமடைவோரின் எண்ணிக்கை இல்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது. இந்நிலையில்தான், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு ஐ.ஏ எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நேற்று காலை ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனையின் அடிப்படையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும், ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளை கண்காணிக்கவும் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சித்திக் ஐ.ஏ.எஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு செல்வராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

click me!