கையை தூக்கி கவர்னர் முன்பாக ‘கெத்தாக’ உட்கார்ந்த ஸ்டாலின்..! நீட் விவகாரத்தில் முக்கிய சந்திப்பு... !

By Raghupati RFirst Published Nov 27, 2021, 1:06 PM IST
Highlights

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் ‘பன்வாரிலால் புரோகித்’ ஆவார். தேர்தலின் போது, மத்திய அரசை கண்டித்த திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஒன்றிய அரசு என்று கூறி சர்சையை கிளப்பியது. அந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். கவர்னர் ஆர்.ரன்.ரவி பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவார் என்றும், குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு வைத்திருக்கும் ‘செக்’ என்றும் கூறப்பட்டது. கவர்னருக்கு அனுப்ப துறை ரீதியான அறிக்கை வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிக்கை விட, தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகியது.

ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது எந்த விதத்தில் பாதிக்கிறது என்று கண்டறிய  நீதியரசர்  ஏ.கே ராஜன் தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த குழு கொடுத்த ஆய்வு அறிக்கையை வைத்து, நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள  பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்கியது அந்த அறிக்கை.இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவும்  நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்ட முன்வடிவிற்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து இன்று வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது கையை தூக்கி, கவர்னர் முன்பாக ஸ்டைலா, மாஸா,  கெத்தாக உட்கார்ந்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின். இது முதல்வருக்கும் கவர்னருக்கு இடையேயான சுமுகமான புரிதலை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 

எந்தவித சர்ச்சையும் இல்லாமல், ஆச்சர்யத்துடன் முடிந்து இருக்கிறது இந்த சந்திப்பு. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

click me!