ஏழைகள் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி பழனிச்சாமி..!! 2.177 கோடி அள்ளி கொடுத்து ஆதரவு..!!

Published : Apr 25, 2020, 11:17 AM IST
ஏழைகள் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி பழனிச்சாமி..!!  2.177  கோடி அள்ளி கொடுத்து ஆதரவு..!!

சுருக்கம்

தமிழகம் முழுவதிலும் உள்ள தீப்பெட்டி  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு   தீப்பெட்டி  தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

தமிழகம் முழுவதிலும் உள்ள தீப்பெட்டி  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு   தீப்பெட்டி  தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .  தமிழகத்தில் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது தமிழகத்தில் இதுவரை  1683 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது , வைரசை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன அமைப்புசாரா தொழிலாளர்கள் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் ஆனாலும் தமிழகத்தில் இங்கே வரும் தீப்பெட்டி மற்றும் பட்டாசு  ஆலைகளை 50 சதவீத தொழிலாளர்களுடன் இயக்கலாம் என மத்திய அரசு விதிகளை தளர்த்தி இருந்தது

.

20ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் அனைத்தும் 50% தொழிலாளர்களுடன் இயங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது . மேலும் ஆலைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் ,  ஆலைகளில்  6 அடி இடைவெளியில் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் .  தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களிலும் சமூக இடைவெளி இருத்தல் வேண்டும் என கூறப்பட்டது .   இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .  திங்கட்கிழமை பெரும்பாலான ஆலைகள் திறக்கப்படும் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு செல்வார்கள் என பலரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அதற்கு மாறாக ஏராளமான ஆலைகள் இயங்கவில்லை .  மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் தொழிலாளர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாத தாலும் ஆலைகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் முழு விவரம் :-  தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதிசெய்ய மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது ,  இதையடுத்து பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும்  கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன ,  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 1778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் (இஎஸ்ஐ) பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தல 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் இதற்காக 2.177 கோடி  ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது

 

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!