முதலமைச்சர் நாளை டெல்லி பயணம் - வறட்சி நிவாரணம் குறித்து பிரதமரை சந்திக்க முடிவு...!!!

Asianet News Tamil  
Published : May 22, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
முதலமைச்சர் நாளை டெல்லி பயணம் - வறட்சி நிவாரணம் குறித்து பிரதமரை சந்திக்க முடிவு...!!!

சுருக்கம்

tamilnadu chief minister will go to delhi at tomorrow about farmers issue

வறட்சி நிவாரணம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதலமைச்சர் நாளை டெல்லி செல்கிறார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகள் பிரச்சனைகளை எடுத்து கூறினார்.

மேலும் விவசாயிகள் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் வழங்கினார்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டிருந்தார். நேரம் ஒதுக்கபட்டதையடுத்து நாளை மாலை டெல்லி செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

2011ல் விஜயகாந்த்.. 2026ல் பிரேமலதா.. திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக..!
தவெகவில் சீட் வேணுமா..? விஜய் போட்ட கண்டிசன்..! தலைதெறிக்க ஓடும் வேட்பாளர்கள்..!