காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு... தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 8, 2019, 11:17 AM IST
Highlights

தமிழக காவல்துறைக்கு நவீனமயாக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக காவல்துறைக்கு நவீனமயாக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் கணினி இணைப்பு திட்டத்தால் காவல்துறை நவீனமாயக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ407.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 

click me!