அரசு ஊழியர்களுக்கு சம்பளச் செலவு மட்டும் ரூ.57 ஆயிரத்து 600 கோடி... ஓ.பி.எஸ் அதிரடி தகவல்

By Thiraviaraj RMFirst Published Feb 8, 2019, 11:02 AM IST
Highlights

அரசு ஊழியர்களுக்கு சம்பளச் செலவு மட்டும் ஆண்டுக்கு ரூ.57 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்படுவதாக துணை முதல்வர் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்களுக்கு சம்பளச் செலவு மட்டும் ஆண்டுக்கு ரூ.57 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்படுவதாக துணை முதல்வர் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில், ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டம். ரூ. 2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி மிக உய்ய  சூரிய பூங்கா திட்டம் உருவாக்கப்படும்.

சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் 57 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். சுகாதாரத்துறையில் லட்சியத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.247 கோடி செலவிடப்படும். வரும் நிதி ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 2000 கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் இடம் அமைக்கப்படும்.மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும்’’ என அவர் அறிவித்துள்ளார்.  
 

click me!