சும்மாவே கெத்து தான்... கல்வித்துறைக்கு இத்தனை கோடி வேறு ஒதுக்கியாச்சா... இனி அதிரடி காட்டப்போகும் செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Feb 8, 2019, 1:19 PM IST
Highlights

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.4581.21 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி திட்டங்களை செங்கோட்டையன் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.4581.21 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி திட்டங்களை செங்கோட்டையன் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2019-20-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.28,757 கோடி நிதியில், 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும்.  

அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு நிதி தரவில்லை. நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2019-20ம் ஆண்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,362 கோடி ஒதுக்கீடும், இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடப்பட்டுள்ளது. நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உயர்கல்வித்துறைக்கு ரூ.4,581.21 கோடி நிதியில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

குறைந்த செலவில் தரமான உயர்கல்வி பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். 29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கியுள்ளோம் என தெரிவித்தார். 2019-20-ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும். முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தி வரும் செங்கோட்டையனின்  நடவடிக்கைகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறைக்கு  ரூ.28,757 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதால் மேலும் பல புதிய திட்டங்களை அவர் மேற்கொள்ள திட்டமிடுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

 

click me!