
2109 – 20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் அறிபிவித்தார்.. இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதே போல் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ 1656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் குறிப்பிடடார்.
இதைத் தொடர்ந்து மற்றும் ஒரு அதிரடி அறிவிப்பை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்டார். அதன்படி பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்க 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரொக்கப்ப பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார். இத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக 48.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.