Annamalai : இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4-ஆம் தேதி வெளியிட உள்ளோம். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை
திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாந சுவாமி கோவிலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை வருகை தந்தார். ஶ்ரீரங்கம் கோவிலில் வழிபட்ட அவர் தொடர்ந்து கோவிலில் உள்ள தாயார் சன்னதி, ராமனுஜர் சன்னதி ரங்கநாந சாமி சன்னதி க்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஶ்ரீரங்கம் கோவில் யானையிடம் ஆசி பெற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4-ஆம் தேதி வெளியிட உள்ளோம்.
ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது. அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை, புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி என சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
சசிகலா வருகை
அனைத்து தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. நம்பர் ஒன் கட்சி என்பது தான் அனைவரின் இலக்கு. இதனால் தமிழகத்தில் பாஜகவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவர கடுமையாக உழைத்து வருவதாகவும், இதற்காக பாடுபடுவோம்.சசிகலா பாஜகவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற நயினார் நாகேந்திரன் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல என்று கூறினார்.
இதையும் படிங்க : நான் போலீஸ் இல்லை, பாஜககாரன்.. முகநூலில் பற்ற வைத்த காக்கி.. போலீசார் அதிர்ச்சி !
இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !