முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

Published : Jun 01, 2022, 02:51 PM IST
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

சுருக்கம்

கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களை சுமார் 4 கோடி பக்கம் அளவிற்கு பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கோவில் சொத்துக்களை இணைய தளத்தில் பதிவிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியினை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 'திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஒரு கருவி மூலம் அளவிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருப்புலிவனம் ஈஸ்வரனுக்கு 9. 27 ஏக்கர் நிலங்கள் அளவிடும் பணி இன்று எங்கு துவங்கப்பட்டது. அந்தவகையில் ஐம்பத்தி ஓராயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் அளவிடும் பணிகல் நிறைவடைந்து இருக்கிறது. கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களை சுமார் 4 கோடி பக்கம் அளவிற்கு பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கோவில் சொத்துக்களை இணைய தளத்தில் பதிவிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

தமிழக முதல்வர் ஆட்சிக் காலத்தில் இது ஒரு ஆன்மிகப் புரட்சி என்று கூறலாம் அந்த அளவுக்கு பணிக்காக 150 நபர்கள் பணியமர்த்தப்பட்டு 20 மண்டலங்களில் 50 குழுக்களாக பிரிந்து இந்த அளவிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 100 குழுக்களாக விரிவாக்கம் செய்து விரைந்து இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க : நான் போலீஸ் இல்லை, பாஜககாரன்.. முகநூலில் பற்ற வைத்த காக்கி.. போலீசார் அதிர்ச்சி !

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!