அதப்பத்தி எனக்கு தெரியாது...! அப்புறம் சொல்றேன்...! எஸ்கேப் ஆன தமிழிசை!

Asianet News Tamil  
Published : Jan 24, 2018, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
அதப்பத்தி எனக்கு தெரியாது...! அப்புறம் சொல்றேன்...! எஸ்கேப் ஆன தமிழிசை!

சுருக்கம்

Tamilnadu BJP Leader Tamilisai Soundararajan Pressmeet

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்திருந்தது குறித்து, அதனை நான் இன்னும் பார்க்கவில்லை என்றும் அதனை பார்த்துவிட்டு பிறகு சொல்வதாகவும், செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் பிரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் - சமஸ்கிருதம் அகாராதியை, ஹெச். ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான அரிகரன் எழுதியது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழா துவங்கியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மேடையில் அமைர்ந்திருந்த விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்ற விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்த்தாய் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்தருந்தது குறித்து, காஞ்சி சங்கர மடம், தியானத்தில் இருந்ததாக விளக்கம் அளித்திருந்தது.

தமிழ்த்தாய் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்தது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

காந்திய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது, தமிழ் மொழி தாழ்ந்தது என்று நினைத்தாலும் இவர்களுக்கு ஒரு மேடை மரபு ஒன்று இருக்கிறது என்பது நினைவில் வந்தாக வேண்டும். மேடையில் இருக்க கூடியவர் ஏற்க மறுத்தாலும் விருப்பு வெறுப்புகளை கடந்து மேடை நாகரீகம் கருதியாவது எழுந்து நின்றிருக்க வேண்டும். அப்படி எழாமல் போனது தமிழை எந்த அளவுக்கு காஞ்சிமடம் புறக்கணிக்கிறது என்பதை தான் விளக்குகிறது என்று கூறியிருந்தார்.

இது குறித்து மதுரை ஆதீனம் கூறும்போது, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கு உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது என்று கூறியுள்ளார்.  இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்த்து தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து தனக்க தெரியாது என்று அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். எல்லா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பபடுவதாக செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை, தான் இன்னும் அதனை பார்க்கவில்லை; பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று கூறிச் சென்றுவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!