கள்ளச்சாரய உயிரிழப்புகளுக்கு கண்டனம்... ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக பாஜக!!

By Narendran S  |  First Published May 18, 2023, 7:24 PM IST

கள்ளச்சாராய உயிரிழப்புகளையும் அதனை தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. 


கள்ளச்சாராய உயிரிழப்புகளையும் அதனை தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. முன்னதாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து  22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த வேண்டுமெனவும், சாராயம் விற்பனையில் ஈடுபடுபவகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர்..! பதவியேற்பு விழாவிற்கு கர்நாடகா செல்லும் மு.க. ஸ்டாலின்

Latest Videos

அதன்படி மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் இறங்கியுள்ள போலீஸார், அந்தந்த மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து , கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போன்று நீட்டுக்கும் விலக்கு வேண்டும் - அன்புமணி கோரிக்கை

இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கள்ளச்சாராய உயிரிழப்புகள், சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அதிமுக சார்பில் வரும் 22ஆம் தேதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. 

click me!