Tamilnadi Floods:இன்று நாள் முழுவதும் கொட்டி தீர்க்குமாம்.. இந்த 5 மாவட்டங்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்..

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2021, 12:17 PM IST
Highlights

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முழுவதும் சென்னையில் அதிக மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு சென்னை வாசிகளை கதிகலங்க வைத்துள்ளது. அதேபோல்  நாளை 12-11-2021 நீலகிரி, கோவை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என்றும், அது சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் திசை வழிபோக்கு மாறியுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், சென்னையில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. விடிந்தும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால்  மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது. சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  திநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிக அளவில் பெய்துள்ளது, கோடம்பாக்கம், திநகர், நசரத்பேட்டை, குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக நீரில் தத்தளிக்கிறது. அடையார், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மொத்தமாக சென்னையை மாநரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல  வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது மேலும் இது  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என எச்சரித்துள்ளார். சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 130 கிலோ மீட்டர் தொலைவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும், அது மெல்ல மெல்ல சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்றும், ஆனால் கரையைக் கடக்கும் போது 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளார். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் கரையை கடக்க உள்ளதால் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்றும் மூன்று இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது என்றும், 25 இடங்களில் மிக கனமழை ஏற்கனவே பெய்துள்ளது என்றும், நளை 12-11-2021 நீலகிரி, கோவை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் சென்னை மக்கள் தத்தளித்து வரும் நிலையில் இன்று முழுவதும் கன மழை தொடரும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 

click me!