கருப்பு பூஞ்சை நோய்க்கு தெலுங்கானாவிலிருந்து மருந்து கொண்டுவந்த தமிழிசை.. கோரிக்கை வைத்த நொடியில் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 10:05 AM IST
Highlights

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வரவழைத்துள்ளார்.
 

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வரவழைத்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் நோய்த் தொற்று குறைந்தபாடில்லை. இதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை புதுச்சேரி மாநிலத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.  

அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனே கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 10 ஆம்பொனைக்ஸ் மருந்துகள் தெலங்கானாவிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

உடனடி மருத்துவ உதவிகள் அளிக்க  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரிகளுக்கு நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

 

click me!