கொரோனாவுடன் கைகோர்த்த பருவமழை.. அலறும் மக்கள்.. அல்லாடும் தமிழ அரசு.!!

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 9:28 AM IST
Highlights

கொரோனா தொற்று அச்சத்தை கருத்தில்கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சத்தை கருத்தில்கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக உள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவ மழை, இந்த வருடம்  முன்கூட்டியே ஆரம்பிப்பதாக தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கிருஷ்ணகிரி, நீலகிரி, என பல்வேறு மாவட்டங்களில் மலை பொழியும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வரும் 22ம் தேதி அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி உருவாகி அது 24ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், இதன் தாக்கத்தால் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார். மழை நேரங்களில் ஏரி குளங்கள் உடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மழை வெள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முகாம்கள் அமைக்கப்படும் எனவும் அதேப்போல்,   கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு முகாம்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக முகாம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை திரும்பி வரச் சொல்லி செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தி இருப்பதாகும், கடலுக்கு சென்ற 45நாட்டு படகுகளில் 27திரும்பியுள்ளதாகவும் 18படகுகள் திரும்பிவிடும் எனவும் அதையும் கண்காணிக்கிறோம் எனவும் கூறினார். நீலகிரிக்கு  பேரிடர் மீட்பு படையை அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று தான் மழை ஆரமித்துள்ளது நாளை முதல் மழையை பொறுத்து கேம்புகளில் தங்கவைக்கப்படுவார்கள். புயல் ஒடிசாவை நோக்கி செல்வதால் தமிழகத்தில் அதிக பாதிப்பு இருக்காது என தெரிவித்த அவர் மழை வெள்ள சேதங்களை தடுக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 

டவ் தே புயல் காரணமாக காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் முதல்வர் உத்தரவின்படி மீன்வளத்துறை மூலமாக  இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க தூர்வாரும் பணிகள் நடைபெறும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கொரோனா பணிகளில் அதிக கவனம் செலித்தி வருவதால் வளர்ச்சி பணிகளில் தங்களால் கவனம் செலுத்த இயலவில்லை என கூறினார்.  இரவு 12மணிக்கும் 1மணிக்கும் அமைச்சர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

click me!