கடன் பெற்ற மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.. வங்கி அதிகாரிகளுக்க அமைச்சர் அறிவுரை..

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 9:13 AM IST
Highlights

கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் கடனுதவி பெற்ற மக்களிடம் கடனை திரும்ப பெறுவதற்கு மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர். ஊரக வளர்ச்சி சார்பில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது தொடர்பான ஆலோசனை தான் நடைபெற்றது. குறிப்பாக ஊரக வளர்ச்சி கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிராம மக்கள் நிதி உதவி பெற்றனர். 

அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்போது இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அந்தந்த வங்கி நிர்வாகத்திடம் உள்ள அதிகாரியிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். கடன்களை பெறுவதற்கு வங்கி நிர்வாகங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 
click me!