வேலூரில் ஏ.சி. சண்முகம் இவ்வளவு ஓட்டு வாங்க பாஜகவே காரணம்... தமிழிசை சவுந்தரராஜன் புது விளக்கம்!

By Asianet TamilFirst Published Aug 14, 2019, 7:18 AM IST
Highlights

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார். மிகவும் நெருக்கமாக வந்து ஏ.சி. சண்முகம் தோல்வியடைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் இவ்வளவு ஓட்டு பெற்றதற்கு முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கமே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார். மிகவும் நெருக்கமாக வந்து ஏ.சி. சண்முகம் தோல்வியடைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததிலிருந்து தோல்வி குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள ஏ.சி. சண்முகம், ‘தேர்தல் தோல்விக்கு முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவையே காரணம்’ என்று தெரிவித்திருந்தார்.


ஏ.சி. சண்முகத்தின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “முத்தலாக், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கம் போன்ற காரணத்தால் வேலூரில்  தான் தோற்றதாக ஏ.சி.சண்முகம் சொன்னது தவறானது. உண்மையில் இதுபோன்ற அறிவிப்புகள்தான் அவருக்கு வேலூரில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தந்துள்ளது. முஸ்லீம்  மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. இங்குள்ள அரசியல் கட்சியினர்தான் அதை எதிர்க்கிறார்கள். முஸ்லீம் மக்கள் ஆதரித்ததால்தான் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோற்றார்” எனத் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அதாவது, வேலூரில் ஏ.சி.சண்முகம் மிக நெருக்கமாக  தோல்வியடைந்ததற்கு மோடி அரசின் செயல்பாடுகளே காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தமிழிசை. ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது பாஜகவினரை அதிமுக தள்ளியே வைத்திருந்தது. மாநில நிர்வாகிகளை  தேர்தல் பிரசாரத்துக்குக்கூட அழைக்கவில்லை. பாஜகவினரை அழைத்து சென்றால், வாக்குகள் கிடைக்காது என்பதால், அதிமுக பாஜகவினரை அழைக்கவில்லை என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

click me!