"ரஜினி வந்தால் பா.ஜ.க.வுக்கு பலம்தான்.. ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை" - கொந்தளிக்கும் தமிழிசை

Asianet News Tamil  
Published : May 23, 2017, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"ரஜினி வந்தால் பா.ஜ.க.வுக்கு பலம்தான்.. ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை" - கொந்தளிக்கும் தமிழிசை

சுருக்கம்

tamilisai slams rajini on alliance with bjp

ரஜினி போஃபியா பா.ஜ.க.தலைவர்களை பாடாய்படுத்தி வருகிறது. மாநிலத் தலைவர்கள் தொடங்கி, தேசியத் தலைவர்கள் வரை, அவர் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று பிரயத்தனம் செய்யாத குறையாக அறைகூவல் விடுத்து விருகின்றனர்.  

ரஜினி போன்ற நல்லவர்கள் பா.ஜ.க.வில் தான் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவே ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து அடித்து நொறுக்கியிருக்கிறார்....

இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் துலாபாரம் வைப்பது போல ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சரிசமமாக ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. தமிழர்களை இழிவாகப் பேசுவதா என்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கொடும்பாவி எரித்தால், சென்னையில் தமிழர் முன்னேற்ப்பேரவை ரஜினியின் உருவ பொம்மையை வெடிவைத்து தகர்த்திருக்கிறது...

எதிர்பார்ப்பையும், எதிர்ப்பையும் ஒரு சேர சம்பாதித்திருக்கும் ரஜினியை வளைக்கும் முயற்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முன்பு அவர் மீது விமர்சனக் கனைகளை அள்ளித் தெறித்த தமிழிசை தற்போது, சாப்ட் கார்னருக்கு மாறியிருக்கிறார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "  ரஜினி பா.ஜ.க.வில் இணையக் கூடாது என்று ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் போன்றோர் பேசி வருகின்றனர். இவ்விவகாரத்தில் பா.ஜ.க. மீது விமர்சனங்களை முன்வைக்கும் தலைவர்கள், முதலில் அவர்களது கட்சியை வளர்க்கட்டும். ரஜினி வந்தால் பா.ஜ.க.வுக்கு பலம். ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை" இவ்வாறு அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!