கல்யாண நாள்ல ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை..! இப்படியா சவால் விடுப்பது..?

By ezhil mozhiFirst Published Aug 20, 2019, 5:04 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "இது என்ன ஒரு சவால்? விளையாட்டாக உள்ளது.. நாம் என்ன மக்களை சந்திக்க போகிறோமா? அல்லது படத்தில் நடிக்கும் விவகாரமா இதெல்லாம் ஒரு சவாலா? இந்த சவாலை அவர் எப்படி விடுத்துள்ளார் என்று எனக்கு தெரியவே இல்லை... என கலாய்த்து பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தி வருகிறார்.

குறிப்பாக நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் இதற்கு பொதுமக்களும் உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தனியாக எங்கும் வேண்டுமென்றாலும் செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியதோடு, ஆனால் நான் செல்வேன்.. மக்களுக்கு என்னை நன்றாகவே தெரியும் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "இது என்ன ஒரு சவால்? விளையாட்டாக உள்ளது.. நாம் என்ன மக்களை சந்திக்க போகிறோமா? அல்லது படத்தில் நடிக்கும் விவகாரமா இதெல்லாம் ஒரு சவாலா? இந்த சவாலை அவர் எப்படி விடுத்துள்ளார் என்று எனக்கு தெரியவே இல்லை... என கலாய்த்து பேசினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, உதாரணத்திற்கு; "நானும் ஒரு சவால் இப்படியும் விடுக்கலாமே.... என தெரிவித்து "துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் பேச முடியுமா? என்னால் மூன்று மணி நேரம் கூட புள்ளி விவரத்தோடு பேச முடியும் என தெரிவித்து உள்ளார். இதில் ஒரு விஷயத்தை உற்று நோக்கிய பார்த்தோமேயானால் ஒன்று நமக்கு நன்றாகப் புலப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு 44 ஆவது ஆண்டு திருமண நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தினத்தில் சொல்லி வைத்தார் போல தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஸ்டாலினை கலாய்ப்பதும்... ஸ்டாலினும் அதற்கு கிண்டலாக பதிலடி கொடுப்பதுமாக செல்கிறது. முன்னதாக தமிழிசை அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "வாய்க்கு வந்ததையெல்லாம் அவர்கள் பேசினால் அது பற்றி எனக்கு கவலை இல்லை... பொன் ராதாகிருஷ்ணன்,எச் ராஜா, தமிழிசை போன்றவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்கள் என சிம்பிளாக சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் ஸ்டாலின்.

ஆனாலும் இந்த பேச்சு இன்றோடு முடிவதாக தெரியவில்லை... வேறு என்ன சவால்.. எப்படி எல்லாம்.. யாரெல்லாம் விடுக்க போகிறார்களோ..? என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளப்பியிருக்கிறது அரசியல் வட்டாரத்தில்...

click me!