தங்கம் தாவியதால் மொத்தமாக காலியான கூடாரம்... அமமுகவிலிருந்து 5000 தலைகளை அசால்ட்டா தூக்கிய ஓபிஎஸ்!!

By sathish kFirst Published Aug 20, 2019, 4:58 PM IST
Highlights

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸை போலவே, பெரிய கையாக இருந்த ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன் அமமுகவில் அசால்ட் காட்டி வந்தார். கடந்த தேர்தலுக்கு பின் தினகரனுடனான பிரச்சனையால் திமுகவிற்கு தாவிய ஆண்டிபட்டி தங்கம் அங்கு சிறப்பாக தனது அரசியல் பணியை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார். ஆண்டிபட்டி தங்கம் திமுகவில் இணைந்ததால் விரக்தியில் இருந்த அமமுகவினர் கூடாரத்தை காலி செய்துகொண்டு தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸை போலவே, பெரிய கையாக இருந்த ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன் அமமுகவில் அசால்ட் காட்டி வந்தார். கடந்த தேர்தலுக்கு பின் தினகரனுடனான பிரச்சனையால் திமுகவிற்கு தாவிய ஆண்டிபட்டி தங்கம் அங்கு சிறப்பாக தனது அரசியல் பணியை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார். ஆண்டிபட்டி தங்கம் திமுகவில் இணைந்ததால் விரக்தியில் இருந்த அமமுகவினர் கூடாரத்தை காலி செய்துகொண்டு தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளிலிருந்து அமமுக  கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராமராஜ், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட  5500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி  ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இதில் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள்  மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த இணைப்பு விழாவில் முன்னாள் எம்பி பார்த்திபன் வரவேற்றார்.  மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையது கான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்தி பேசிய போது.... புரட்சித் தலைவர் 1972ல் துவக்கி 10 ஆண்டுகள் முதல்வராக சிறப்பாக பணியாற்றினார். தலைவர் மறைவுக்கு பின் அம்மா பல சோதனைகள், வேதனைகளை தாண்டி 18 ஆண்டுகள் முதல்வராக இருந்து பல நல்ல தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்தார். அதன் காரணமாக தமிழக மக்கள் அம்மா அம்மா என்று அன்போடு அழைத்தனர். அவருடைய கடுமையான உழைப்பால் 16 லட்சம் தொண்டர்களாக இருந்த நமது கழகத்தை ஒன்றரை கோடி தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக எஃகு கோட்டையாக மாற்றினார். 

நமது இயக்கத்தில் சாதாரண தொண்டராக இருப்பதே மிகப் பெரிய பெருமையாகும். உள்ளபடியே இன்றைய இந்த விழாவை பார்க்கும் போது   நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். நாம் அனைவரும் அண்ணன்-தம்பிகள் மற்ற பாகுபடுகள் நமக்குள் இல்லை. அனைவரும் இயக்கத்தின் ரத்தம். வத்தலக்குண்டு ஆறுமுகம் போன்று தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று  அம்மா சொன்னது போல் மக்களுக்காக பணியாற்றும் அர்ப்பணிப்பு கொண்ட இயக்கம் தான் அதிமுக. 

ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுகள் நமது கழகம் மக்கள் பணியாற்றும். பொது வாழ்வில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அதன் வழியில் நடந்து வரும் கழகம் நமது கழகம் மட்டுமே. தலைவர், அம்மா ஆகியோர் வழியில் நமது இயக்கம் தொண்டர்களின் இயக்கமாகவே இருக்கும். நமக்கு பொதுவான எதிரி திமுக மட்டுமே  தேனி நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றோம். 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம் என்று கூறினார். 

இதற்க்கு முன்பாக பேசிய நிர்வாகிகள் சிலர்; அமமுக கட்சியின்  கொள்கைகள் பிடிக்கவில்லை, அக்கட்சியில் எழுச்சியும் இல்லை. திமுகவிலும்   சேர விருப்பமில்லை. எனவே மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டோம் என்று  கூறினர்கள்.  

click me!