கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

By sathish kFirst Published Mar 5, 2019, 11:58 AM IST
Highlights

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்துள்ளார். அவரை எதிர்த்து பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை களமிறங்க இருக்கிறாராம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்துள்ளார். அவரை எதிர்த்து பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை களமிறங்க இருக்கிறாராம்.

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்பம் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. போட்டியிட விரும்பி பலரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில்  கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்துக்கு இன்று  வந்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்தார். முன்னதாக மெரினா கடற்கரைக்குச் சென்ற கனிமொழி விருப்ப மனுவினை அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிரு‌ஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுவதாகவும், அவரை எதிர்த்து பிஜேபியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை போட்டியிடுவதாகவும் பத்திரிகையாளர்கள்தான் கூறி வருகின்றனர். கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும்போதுதான் அதை பற்றி உறுதியாக தெரியவரும் என்றார்.

click me!