விடாது விரட்டும் டிடிவி..!! இரட்டை இலை கிடைக்கும் வரை ஓயப்போதில்லை என சபதம்...!

Published : Mar 05, 2019, 11:54 AM ISTUpdated : Mar 05, 2019, 11:55 AM IST
விடாது விரட்டும் டிடிவி..!! இரட்டை இலை கிடைக்கும் வரை ஓயப்போதில்லை என சபதம்...!

சுருக்கம்

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை கிடைக்கும் வரை ஓயப்போதில்லை என தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை கிடைக்கும் வரை தாம் ஓயப்போதில்லை என கூறியுள்ளார். 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

 

இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நிறைவி பெற்று கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது. 

அதில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!