
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாகத் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘நோட்டாவை விட பாஜகவுக்கு குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில் இந்த தோல்விக்கு தமிழிசை தான் காரணம் எனவே இந்த இடைதேர்தல் தோல்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் தான் காரணம் என்ற ரீதியில் எதிர்க் கோஷ்டியினர் டெல்லி தலைமையிடம் புகார் அளித்ததையடுத்து தேசியத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வலைதளப் பதிவர் கல்யாண ராமன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “டாக்டர் தமிழிசை அவர்கள் 27ஆம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மை என்றால் அவருக்கு எனது பாராட்டுகள்...” “டாக்டர் தமிழிசை அவர்கள் ராஜினாமா செய்த தேதியை 28 என மாற்றிப் படிக்கவும்... ராஜினாமா உறுதி செய்யப்பட்ட தகவல்...” பதிவிட்டார்.
தனது முகநூலில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒரு முக்கிய அதிகாரி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது என மறுபடியும் ஒரு பதிவை போட்டுள்ளார். இப்படி தேசிய கட்சியிலுள்ள ஒருவரின் பதவியை எப்படி இந்த மாதிரி செய்வார்கள் என தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னணி இணையதளத்திற்கு தமிழிசை அளித்த பேட்டியில், இது போன்ற செய்திகளைப் பதிவிடுபவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை.. இவர்களைக் கூப்பிட்டு அமித்ஷா கூறிவிட்டாரா என்ன? என மறுத்துவிட்டார். தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலம் முடிந்த போதும் நீட்டிப்பில் இருப்பது குறுப்பிடத்தக்கது.