எது எப்படியோ எங்க குடும்பத்திலிருந்து ஒரு எம்.பி.டா... குஷியில் துள்ளிக் குதிக்கும் தமிழிசை!!

By sathish kFirst Published May 26, 2019, 4:31 PM IST
Highlights

இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி தான், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தாற்காலிகமாக வெற்றி பெற்றதாக கூறி தாறுமாறாக சமாளிப்பார். ஆனால் இப்போது அவருக்கு இது உண்மையாகவே வெற்றிகரமான தோல்விதான்.

இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி தான், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தாற்காலிகமாக வெற்றி பெற்றதாக கூறி தாறுமாறாக சமாளிப்பார். ஆனால் இப்போது அவருக்கு இது உண்மையாகவே வெற்றிகரமான தோல்விதான்.

இது பிஜேபி பண்ண குசும்பா, இல்ல காங்கிரஸ் செய்த சதியா என்று தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் சித்தப்பாவை, பிஜேபியில் முக்கிய தலைவரான முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குக்கு எதிராக களமிறக்கி தமிழிசைக்கு எதிராக களத்தில் இறக்கி கேம் விளையாடியது.  

நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் பிஜேபி சார்பாக தனது சீனியர் களமிறங்கியிருக்கிறார். இதனால் தமிழிசைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் சொல்லணும் ஆனால், அதே தொகுதியில் தனது சித்தப்பாவான வசந்தகுமாரை நிற்க வைத்து தமிழிசையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது காங்கிரஸ். 

ஒரு கட்சியில்  அப்பா ஒரு கட்சிக்கும், மகன் அல்லது மகள் ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது இன்னொரு ரகம், அது போல் அண்ணன் ஒரு கட்சியிலும் தம்பி ஒரு கட்சியிலும் இருப்பார்கள்.  தேர்தல் என வந்துவிட்டால் வேறு வழியே இல்லாமல் என்னதான் குடும்பமாக இருந்தாலும்  காட்டு காட்டுன்னு காட்டுவார்கள். 

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் பிஜேபி  சார்பில் போட்டியிட்டார்.  நாங்குநேரி எம்எல்ஏவாக இருக்கும் வசந்தகுமாரை அதே தொகுதியில் நிறுத்தியது. காங்கிரஸ் சார்பின் பொட்டில் இறங்கிய இந்த வசந்த குமார் தமிழிசையின் சித்தப்பா.

கட்சி வேட்பாளரின் பலத்தை காட்டிலும் எதிராளியின் பலவீனத்தை தூண்டும் விதமாக தாறுமாறாக தாக்கிப் பேசுவார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை, தங்களது கட்சியின் சீனியருக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில்  பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது தமிழிசைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. 

பொன் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை தமிழிசை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பதா, இல்லை தனது சித்தப்பு வசந்தகுமாரை தாக்கி பேசி ஒட்டு கேட்பதா என மனசு நொந்துப் போனார் தமிழிசை. 

இந்நிலையில் தேர்தல் முடிவில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 6,27,235 வாக்குகளை பெற்றுள்ளார்.  பொன்.ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார். அதேபோல, தூத்துக்குடி போட்டியிட்ட அவர், கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வீர வசனம்  பேசி களமிறங்கினார். அங்கு அவர் பெற்ற வாக்குகள் 2,14,497, ஆனால் அவரை விட கனிமொழி 5,60,345 வாக்குகளை வாங்கி சுமார், 3,45,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் முடிவால் நாடு முழுவதும் பிஜேபி கூட்டணி சுமார் 353 தொகுதியை கைப்பற்றி தான் மட்டும் தோற்றுவிட்டோமே என சோகத்தில் இருந்த தமிழிசைக்கு, தனது சித்தப்பா வசந்த குமார் ஜெயித்தது கொஞ்சம் ஆறுதலாகவே இருந்ததாம். எது எப்படியோ இது தனக்கு வெற்றிகரமான தோல்வி தான் ஆமாம் தான் தோற்றாலும் தனது சித்தப்பா வசந்தகுமார் ஜெயித்ததால் செம குஷியில் இருக்கிறாராம் தமிழிசை.

click me!