நான் குற்றப்பரம்பரைன்னு சொன்னது திமுகவைத்தான் ! தடாலடி தமிழிசை !!

Published : Mar 28, 2019, 11:10 PM IST
நான் குற்றப்பரம்பரைன்னு சொன்னது திமுகவைத்தான் ! தடாலடி தமிழிசை !!

சுருக்கம்

குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பத்தைதான் என பாஜக  தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார் .

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக  சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார். தமிழிசை வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை  ஏற்பட்டது.

இதனையடுத்து திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் தமிழிசை  தனது டுவிட்டர் பக்கத்தில்  தகவல் ஒன்றை வெளியிட்டார்.  அதில் திமுவை விமர்சனம் செய்யும் வகையில் எதுகை, மோனையில் அவர் வெளியிட்ட தகவல் தவறாக பரப்பப்பட்டது. 

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பத்தைதான் என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழிசை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற அமர்வின் இடையே திமுகவினர்  எனது கணவரையும், குடும்பத்தினர் மீது வீண் அவதூறு பரப்பும் வகையில் அவர் தன் குற்ற வழக்குகளையும், வருமானத்தையும் மறைத்ததாக பொய்யான புகாரை அளித்தனர்.

எனது கணவர் புகழை கெடுக்கும் விதத்தில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பம், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான் என விளக்கம் அளித்துள்ளார்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை வன்மையாக கண்டிக்கிறேன்  எனவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!