சென்னை காண்ட்ராக்டர் வீட்டில் ஐடி ரெய்டு !! 15 கோடி பணம் பறிமுதல்...

Published : Mar 28, 2019, 09:55 PM IST
சென்னை காண்ட்ராக்டர் வீட்டில்  ஐடி ரெய்டு !!  15 கோடி பணம் பறிமுதல்...

சுருக்கம்

சென்னையில்  ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய  அதிரடி சோதனையில் ரூ,. 15 கோடி பணம் பறிமுதல் செய்தனர்.  

சென்னையில் ஒப்பந்ததாரர் வீடு உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர்  இன்று சோதனை  நடத்தினர். பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் சபேசன் . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை செய்து வந்தார்.

 இவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.15 கோடி பணத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். சபேசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் சேலம் அருகே உள்ள தம்மம்பட்டியில் உள்ள நகை கடைஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்