மதுரையின் மரண மாஸ் காட்டினோம், திருப்பூரில் தொண்டர்கள் கூட்டத்தால் திணறடிப்போம்... தமிழிசை சபதம்!!

By sathish kFirst Published Jan 29, 2019, 8:43 PM IST
Highlights

நேற்று முன்தினம் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வந்த மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, பிஜேபி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மதுரையில் கூடிய கூட்டத்தைப் பார்த்த மோடிக்கு உற்சாகம் அளித்திருப்பதாகக் கூறுகிறார்கள் பிஜேபி வட்டாரம்.  சுமார் ஒருலட்சத்துக்கும் குறையாத தொண்டர்கள் பாஜக பொதுக்கூட்டத்துக்கு வந்ததாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால் செம்ம ஹேப்பியானாராம்.  அதுமட்டுமல்ல, 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் மதுரைக்கு படையெடுத்ததாம். 

பிரதமர் கான்வாய்க்காக  பாதுகாப்பு கெடுபிடிகள் காரணத்தால், 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மதுரைக்குள் வரமுடியவில்லையாம். அந்த வாகனங்கள் மதுரைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தால் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என பிஜேபியின் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கூட்டத்தைப் பார்த்த மோடி தமிழிசை ஆவேசமாகப் பேச  நேரம் முடிந்தபோதிலும், நீங்க பேசுங்கள் என்று  மோடி கைகாட்டினாராம் , மோடி சொன்னதும் சந்தோஷத்தில் பிரித்து மேய்ந்தாராம் தமிழிசை.

கூட்டம் முடிந்து புறப்பட்டபோது தமிழிசையிடமும், தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவிடமும்  சில தகவல்களைக் கேட்டுள்ளாராம் மோடி,  கடைசியாக, நல்ல கூட்டம் வந்தது. திருப்பூரில் இதைவிட அதிகம் கூட்டம் வருமா?  என்று கேட்க  தமிழிசையோ திருப்பூரை தொண்டர்களால் திணறடிப்போம் என வாக்கு கொடுத்தாராம்.

click me!