95 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பீட்டாங்களா ? ரீல் விடாதீங்கப்பா !! எடப்பாடியை கலாய்த்த டி,டி,வி.தினகரன் !!

By Selvanayagam PFirst Published Jan 29, 2019, 7:45 PM IST
Highlights

95 சதவீத  ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக தமிழக அரசு கூறுவது முற்றிலும் பொய் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.திகனரன் தெரிவித்துள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்த்தில் ஈடுபட்டு வருபவர்களை தமிழக அரசு சஸ்பெண்டு செய்தும், சிறையில் அடைத்தும் வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளிக் கரிவத்துறை எச்சரித்திருநத்து. இதையடுத்து இன்று 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தினகரன் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜெ.சாந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம், வழக்கின் நகல் வழங்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 4-ந்தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியில் வந்த தினகரன்  செய்தியாளர்கடம் பேசினார்.

அப்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தை தடுக்க நினைக்காமல் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர், அரசு ஊழியர்களின் குறைகள் களையப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை என்றும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  என்றும் தினகரன் தெரிவித்தார்.

click me!