"தமிழக அரசை இயக்குகிறதா பா.ஜ.க?" - உண்மையை போட்டுடைத்த தமிழிசை!!!

Asianet News Tamil  
Published : May 23, 2017, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"தமிழக அரசை இயக்குகிறதா பா.ஜ.க?" - உண்மையை போட்டுடைத்த தமிழிசை!!!

சுருக்கம்

tamilisai answers bjp interfere in TN politics

நேற்று கொங்கு மண்டலம் என்றால்... இன்று தெற்கு மண்டலம்..றெக்கை கட்டிப் பறக்கிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,  அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழிசை, பா.ஜ.க சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் பொதுநிகழ்வுகளிலும் கலந்து கொண்டு கல கல பேட்டிகளை தட்டிக் கொண்டிருக்கிறார். 

ரஜினி போஃபியா நிலவும் தற்போது இவர் தரும் ஒவ்வொரு பேட்டியும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது., "ரஜினி வந்தால் பா.ஜ.க.வுக்கு பலம். ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை" என்று சென்னை விமான நிலையத்தில் போட்டுத் தாக்கிய தமிழிசை நேராக திருநெல்வேலி சென்றார். 

"அங்கு பேட்டியளித்த அவர், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார். எனவே ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அவரை பா.ஜ.,விற்கு அழைக்கிறோம்.  எங்கு ரஜினி பா.ஜ.க.வில் இணைந்துவிடுவாரோ என்ற பதட்டம் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது."

"இதனால் தான்  ரஜினி தனிக்கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அ..தி.மு.க., ஆட்சியை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு  பின்னால் நின்று இயக்குவதாக கூறுவதாகக் கூறுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறானது. உண்மையில் நாங்கள் பின்னணியில் இருந்து இயக்கினால் தமிழக  ஆட்சி இன்னமும் சிறப்பாக இருக்கும்." இவ்வாறு தமிழிசை கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!
ஈரான் போரில் சாம்பலாகும் 15 பில்லியன் டாலர்..! ரத்தத்தில் அரபு நாடுகள்.. லாபத்தில் அமெரிக்கா..! சவுதி, துபாய்க்கு நேர்ந்த சோகம்!