சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டும்……! தேமுதிக தலைவர் விஜகாந்த்…..!.

Asianet News Tamil  
Published : May 22, 2018, 08:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டும்……! தேமுதிக தலைவர் விஜகாந்த்…..!.

சுருக்கம்

Tamil politician blames ruling party of Tamil Nadu for the incident happened for the people

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, 100 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர் அப்பகுதி மக்கள். ஆனால் அரசு தூத்துக்குடி மக்களுக்கு சரியாக போக்கு காட்டி வந்தது.

அதனை தொடர்ந்து இன்று அமைதியான முறையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர் ஸ்டெர்லைட் போராட்டக்குழு.

ஆனால் 144 தடை உத்தரவை பிறப்பித்து அந்த போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியதுடன் , போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் மீது,  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் மக்களை அடக்க நினைத்தது அரசாங்கம்.

இந்த சம்பவத்தில் 1 பெண் உட்பட 10 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இதனால் கொதிப்படைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த்,  மக்களின் உயிரும் உடைமைகளும் தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டமும் முக்கியமல்ல.

இப்படி அப்பாவி பொது மக்கள் உயிரை பறித்திருக்கும் இச்சம்பவம், மிகுந்த  அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து அதை நிரந்தரமாக மூட மத்திய அரசும் தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும் . கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் கடமை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் அரசு இப்படி தான் தோன்றித்தனமாக செயல்படுவதும்,  காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். மத்திய அரசும் மாநில அரசும் இதில் முழு கவனம் ஏற்று செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய அதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு. என ஆவேசமாக தெரிவித்திருக்கிறார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!