காவிரியில் பறிபோனது தமிழகத்தின் அளவு... இருப்பதையும் பறித்தது உச்சநீதிமன்றம்

 
Published : Feb 16, 2018, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
காவிரியில் பறிபோனது தமிழகத்தின் அளவு... இருப்பதையும் பறித்தது உச்சநீதிமன்றம்

சுருக்கம்

Tamil Nadus demand rejection the Supreme Court snapped the extra water

தமிழகம் – கர்நாடகாவிற்கும் காவிரி விவகாரம் காலம் காலமாக தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்திற்கு முழு மனதோடு தண்ணீர் திறந்துவிட்டதில்லை,  கர்நாடகாவோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் ஒரு பலனும் இல்லை. ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தே தண்ணீர் வாங்கிக் கொடுக்கிறது. கர்நாடகாவிடம் கேட்டால் அவர்களோ எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என பஞ்சப்பாட்டை பாடி வருகிறது.

இந்நிலையில், நூற்றாண்டுகளாக நீடித்துவரும் இந்த காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் என மொத்தமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் காவிரி வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்கியது.

அப்போது, காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உத்தரவிட்டது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.

தமிழகம் கூடுதலாக 70 டிஎம்சி நீரை கேட்டிருந்த நிலையில், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீரை அளித்து மொத்தம் 284.75 டிஎம்சி நீரை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!